நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் இன்று ரிலீஸ் : 50% பார்வையாளர்கள் மட்டுமே திரையரங்குகளில் அனுமதி

Jan 13 2021 11:42AM
எழுத்தின் அளவு: அ + அ -
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் இன்று வெளியான நிலையில், 50 சதவித பார்வையாளர்கள் மட்டுமே திரையரங்குகளில் அனுமதிக்‍கப்பட்டனர்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் இன்று வெளியானது. மதுரை மாவட்டத்தில் உள்ள 40 திரையரங்குகளிலும் மாஸ்டர் திரைப்படத்தின் முதற்படகாட்சி ரசிகர்களுக்கான காட்சியாக திரையிடப்பட்டது. முதல் காட்சி காலை 4 மணிக்கு திரையிடப்பட்டது. திரையரங்குகளில் முகக்கவசம் அணிந்த பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். கொரோனா ஊரடங்கால் 10 மாதங்களுக்கு பின்னர் திரையரங்குகள் திறக்‍கப்பட்டதால், விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து சினிமா ரசிகர்களும் திரைப்படத்தை ஆர்வமுடன் காண வருகை தந்தனர். எனினும், கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் களையிழந்து காணப்பட்டன.

மதுரையிலுள்ள திரையரங்கில் மாஸ்டர் திரைப்படத்தை பார்த்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் சூரி, மாஸ்டர் படம், மாஸாக உள்ளதாக தெரிவித்தார். அரசின் கொரோனா தடுப்பு வழிமுறைகளுக்கு ரசிகர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அவர் கேட்டுக்‍கொண்டார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00