பொங்கல் பண்டிகைக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம் : கொரோனாவால் வெறிச்சோடிய கோயம்பேடு பேருந்து நிலையம்
Jan 13 2021 12:13PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பொங்கல் பண்டிகைக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டும், கொரோனா காரணமாக சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்படுகிறது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக 16 ஆயிரத்து 221 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. பேருந்துகளின் முன்பதிவு செய்வதற்காக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 10 மையங்களும், தாம்பரம் சானிடோரியம் பேருந்து நிலையத்தில் 2 மையங்களும், பூவிருந்தவல்லி பேருந்து நிலையத்தில் ஒரு மையமும் என 13 முன்பதிவு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சென்னையில் இருந்து 4 ஆயிரத்து 78 பேருந்துகளும், பிற இடங்களில் இருந்து 5 ஆயிரத்து 993 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. பொதுமக்கள் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி பாதுகாப்பான முறையில் பயணம் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கொரோனா காலம் என்பதால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதோடு, பல நிறுவனங்கள் இயங்காததால், மக்கள் கூட்டமின்றி சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் விறிச்சோடி காணப்படுகிறது.