பொங்கல் பண்டிகையையொட்டி விஜய் நடித்த "மாஸ்டர்" திரைப்படம் இன்று ரிலீஸ் : ஆரவாரத்துடன் விஜய் ரசிகர்கள் கண்டு களித்தனர்
Jan 13 2021 12:51PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பொங்கல் பண்டிகையையொட்டி, நடிகர் விஜய் நடித்த "மாஸ்டர்" திரைப்படம் இன்று வெளியாகியது. தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும் விஜய் ரசிகர்கள் உற்சாகத்துடன் கண்டு களித்து வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள திரையரங்குகளில் நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் இன்று வெளியிடப்பட்டது. நீண்ட வரிசையில் நின்று பட்டாசு வெடித்து ஆரவாரம் செய்து, மாஸ்டர் திரைப்படத்தை விஜய் ரசிகர்கள் பார்த்து வருகின்றனர்.
இதேபோல், கர்நாடகாவில் மாஸ்டர் திரைப்படம் இன்று வெளியானதையடுத்து, ரசிகர்கள் நடனமாடியும், பட்டாசுகள் வெடித்தும் உற்சாகத்துடன் கொண்டாடினர். மாஸ்டர் திரைப்படமும் மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளதால், ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.