ஆபாசமாக பேட்டிகளை எடுத்து யூடியூப்பில் வீடியோக்களை பதிவு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - பெருநகர சென்னை காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் எச்சரிக்கை
Jan 13 2021 2:24PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆபாச வகையில் பேட்டிகளை எடுத்து யூடியூப்பில் வீடியோக்களை பதிவு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, பெருநகர சென்னை காவல்துறை ஆணையர் திரு.மகேஷ்குமார் அகர்வால் எச்சரித்துள்ளார்.
சென்னையில் பெண்களிடம் ஆபாசமாக பேட்டி எடுத்து ஒளிபரப்பிய யூ டியூப் சேனலை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சர்ச்சைக்குரிய யூ டியூப் சேனலும் முடக்கப்பட்டது. இந்நிலையில், யூடியூப் சேனல்களுக்கு, பெருநகர காவல் ஆணையர் திரு.மகேஷ்குமார் அகர்வால் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆபாசமான அருவருக்கத்தக்க பேட்டிகளை எடுத்து யூடியூப்பில் வீடியோக்களை பதிவு செய்தால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார். ஆபாச பேச்சு வீடியோக்களை நீக்கவும் திரு.மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.