பொங்கல் தினத்தன்று தென் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல்
Jan 13 2021 2:29PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தேனி மாவட்டங்களில் இடியுடன் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் திரு. புவியரசன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், நாளை மற்றும் நாளை மறுநாள் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மற்றும் காரைக்காலில் மிதமான மழை வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டார்.