விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் இணையத்தில் வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சி
Jan 13 2021 3:06PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விஜய் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள மாஸ்டர் திரைப்படம், இணையத்தில் வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம், இன்று வெளியாகியுள்ளது. 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகவிருந்த இப்படம், கொரோனா அச்சுறுத்தலால் நீண்ட இடைவெளிக்குப் பின் இன்று திரையரங்குகளில் வெளியாகி, ரசிர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில், முழு திரைப்படமும் இணையத்தில் வெளியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மாஸ்டர் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். நேற்று மாஸ்டர் படத்தின் 1 மணி நேர காட்சிகள், தனித்தனியாக இணையத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.