நீட் தேர்வு விடைத்தாள் முறைகேடுகளை சுதந்திரமான அமைப்பு விசாரிக்கக்‍ கோரி வழக்‍கு - சென்னை உயர்நீதிமன்றம் வரும் 21-ம் தேதி முடிவு

Jan 13 2021 4:41PM
எழுத்தின் அளவு: அ + அ -
நீட் தேர்வு விடைத்தாள் முறைகேடுகளை சுதந்திரமான அமைப்பு விசாரிப்பது குறித்து, வரும் 21-ம் தேதி முடிவெடுக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு நீட் தேர்வு விடைத்தாள்களை, கடந்த அக்‍டோபர் 5ம் தேதி தேசிய தேர்வு முகமை வெளியிட்டது. இதில், கோவையைச் சேர்ந்த மனோஜ் என்ற மாணவன் 700-க்கு 594 மதிப்பெண்கள் பெற்றதாக பதிவாகி இருந்தது. இதையடுத்து, அக்டோபர் 17-ம் தேதி, மாணவர் மனோஜ் 248 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றதாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த இரண்டு பட்டியல்களையும் தனது வீடியோவில் பதிவு செய்து, தனக்‍கு குறைந்த மதிப்பெண் வழங்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்‍கு தொடரப்பட்டது. மனுதாரர் சமர்ப்பித்த தரவுகளை அடிப்படையாக கொண்டு, விரிவாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய தேசிய தேர்வு முகமைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு நீதிபதி பி.புகழேந்தி முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கலந்தாய்வு அமைப்பு தரப்பில், மனுதாரருக்கு ஏற்கனவே தூத்துக்குடி மருத்துவ கல்லூரியில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, வழக்கு நிலுவை காரணமாக சேர்க்கை வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து மனுதாரருக்கு மாணவர் சேர்க்கை வழங்க உத்தரவிட்ட நீதிபதி, இந்த விவகாரத்தில் சுதந்திரமான ஒரு அமைப்பை கொண்டு விசாரிப்பது குறித்து, வரும் 21-ம் தேதி முடிவெடுக்கப்படும் என தெரிவித்தார். மனுதாரர் முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தால், படிப்பை கைவிடுவதுடன், அதற்கான கட்டணத்தை செலுத்த வேண்டுமென உத்தரவிட்டு, வழக்‍கு விசாரணையை ஒத்திவைத்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00