தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு திருவிழா (Breath) - அவனியாபுரத்தில் அடங்க மறுத்த காளைகளை அடக்கிய காளையர்கள்
Jan 14 2021 4:41PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பிரசித்தி பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வழக்கமான உற்சாகத்துடன் நடைபெற்றது. சீறிவரும் காளைகளை வீரத்துடன் அடக்கிய காளையர்கள் பரிசுகளை அள்ளிச் சென்றனர்.
பொங்கல் பண்டிகையின் அடையாளமாக விளங்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு கோலாகலமாக நடைபெற்றது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. வாடிவாசல் வழியாக காளைகள் திறந்துவிடப்பட்டவுடன், சீறிப்பாய்ந்து வந்த காளைகளை, இளைஞர்கள் வீரத்துடன் அடக்கினர். தினவெடுத்து திமில்களுடன் சீறிய காளைகளை, தீரத்துடன் இளைஞர்கள் பக்குவமாய் அடக்கி பரிசுகளை வென்றனர்.
அதேவேளையில், இளைஞர்களின் உடும்பு பிடிக்குப் பிடிபடாமல், முரட்டுத்தனமாய் தப்பிய காளைகளும், உரிமையாளர்களுக்கு பரிசுகளை பெற்றுத் தந்தன.
வெற்றி பெற்ற வீரர்களுக்குப் பாத்திரங்கள், வெள்ளிக் காசுகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. காளைகளை அடக்கிய வீரர்களுக்கு, அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் வெற்றிச் சின்னமாம், குக்கர் பரிசாக வழங்கப்பட்டது.