கன்னியாகுமரி மாவட்டம் முத்தாரம்மன் கோவிலில் 251 குடும்பங்கள் பொங்கலிட்டு மகிழ்ச்சி - பொங்கல் கொண்டாட்டத்தில் வடமாநிலத்தவர்கள் பங்கேற்பு
Jan 14 2021 11:44AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம் அருகே, முத்தாரம்மன் கோயிலில், 251 குடும்பங்கள் ஒன்றுதிரண்டு பொங்கல் பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடினர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தைத்திருநாளாம் பொங்கல் திருநாள் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. கொட்டாரம் அருகே, அகஸ்தீஸ்வரம் முத்தாரம்மன் கோயிலில் 251 குடும்பங்கள் ஒரே இடத்தில் ஒன்று கூடி மண்பானையில் பொங்கலிட்டு பொங்கல் பண்டிகையை கொண்டாடினர். ஆண்டுதோறும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பங்கேற்புடன் இவ்விழா நடைபெறும் நிலையில், இந்த ஆண்டு கொரோனா விதிமுறையால் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பங்கேற்கவில்லை. எனினும், மகாராஷ்டிராவை சேர்ந்த சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டனர்.