புதுக்கோட்டை பூச்சந்தையில் பூச்சந்தையில் ஒரு கிலோ மல்லி ரூ.5,000க்கு விற்பனை - அதிக விலையால் வாங்கிச் செல்ல வியாபாரிகள் தயக்கம்
Jan 14 2021 11:49AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுக்கோட்டை பூச்சந்தையில் ஒரு கிலோ மல்லிகை 5 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையாவதால் பூ உற்பத்தி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். செட்டியாபட்டி, வடவாளம், கரம்பக்குடி, கந்தர்வகோட்டை, வடகாடு, கொத்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் பூ விவசாயம் செய்யப்பட்டுள்ளது. கனமழையால் பூக்கள் உற்பத்தி குறைந்துள்ள நிலையில், சந்தையில் ஒரு கிலோ மல்லிகைப்பூ 4 ஆயிரம் ரூபாய் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் அதிக விலை கொடுத்து வாங்கிச் செல்ல வியாபாரிகள் தயக்கம் காட்டி வருகின்றனர்.