தஞ்சை மாவட்டத்தில் விடிய விடிய கனமழை - ஒரத்தநாட்டில் பல ஏக்கரில் நெற்பயிர்கள் சேதம்
Jan 14 2021 4:52PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தஞ்சை மாவட்டத்தில் விடிய விடிய கொட்டி தீர்த்த மழையால், ஒரத்தநாடு பகுதியில் பல ஏக்கரில் நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன.
தஞ்சை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதனால் அறுவடைக்குத் தயாராக இருந்த சம்பா, தாளடி நெற்பயிர்கள் சாய்ந்து மழை நீரில் மூழ்கின. இதேபோல் ஆயிரம் ஏக்கர் பரப்பில், உளுந்துப்பயிர் வயல்களில் மழை நீர் தேங்கியுள்ளது. 5 ஆயிரம் ஏக்கர் நிலக்கடலை பயிர்களும் சேதமடைந்துள்ளன. மழை நீடித்தால் சாய்ந்த நெற்கதிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகும் நிலை ஏற்படும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.