திண்டுக்கல்லில் தை முதல் நாளில் கண்ணீருடன் கலங்கி நிற்கும் விவசாயிகள் - தொடர் மழையால் தண்ணீரில் மூழ்கிய நெற்பயிர்கள்
Jan 14 2021 5:04PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே தொடர் மழையால் 200க்கும் மேற்பட்ட ஏக்கர் நெற்பயிர்கள் மூழ்கியுள்ளன.
வத்தலகுண்டு அருகே விராலிப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட விராலிப்பட்டி, மீனாகன்னிப்பட்டி உட்பட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில், 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயம் செய்து வருகின்றனர். நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள், 200-க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிட்டுள்ள நெற்பயிர்கள், தொடர் மழையால் மூழ்கியுள்ளன. பயிர்கள் மூழ்கி 3 நாட்களுக்கு மேலாகியும், இதுவரை அதிகாரிகள் பார்வையிடவில்லை என விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.