திண்டுக்‍கல் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்வியியல் கல்லூரியில் மாணவ, மாணவியர் சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்

Jan 14 2021 5:08PM
எழுத்தின் அளவு: அ + அ -
திண்டுக்‍கல் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்வியியல் கல்லூரியில், தமிழ் கடவுளான முருகப்பெருமானுக்கு பொங்கல் படைத்தும், சமத்துவப் பொங்கல் வைத்தும் தமிழர் திருநாளாம் தைத்திருநாளை மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.

திண்டுக்கல்லில் இருந்து குஜிலியம்பாறை செல்லும் சாலையில் உள்ள தனியார் கல்வியியல் கல்லூரியில் பயிலும் மாணவ மாணவிகள், ஜாதி மத பேதமின்றி சமத்துவ பொங்கல் கொண்டாடினார்கள். கரும்புகள் கட்டி, வண்ணக்‍ கோலமிட்டு, விளக்கு வைத்து, பொங்கல் வழிபாடு நடைபெற்றது. தமிழர் திருநாளாம் தைத்திருநாளை வரவேற்கும்வகையில் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள தமிழ் கடவுளான முருகப்பெருமானுக்கு பொங்கல் படைத்து, மாணவ மாணவியர் வழிபாடு நடத்தினார்கள். இஸ்லாமிய மாணவ, மாணவிகள் உள்ளிட்ட அனைத்து மதங்கள் மற்றம் சமூகங்களைச் சேர்ந்தவர்களும் ஒன்றுபட்டு, பொங்கல் திருநாளை மகிழ்ச்சி பொங்க கொண்டாடினார்கள். கல்லூரி மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் உள்ளிட்டோர் இவ்விழாவில் கலந்துகொண்டு, மாணவ, மாணவியருடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00