திண்டுக்கல் அருகே தொடர் மழையால் சாலைகளில் தேங்கிய மழைநீர் - இரவில் வீடுகளுக்குள் பாம்பு, விஷப்பூச்சிகள் வருவதாகப் புகார்
Jan 14 2021 5:10PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திண்டுக்கல் அருகே அடியானுத்து ஊராட்சியில் தொடர் மழையால் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. வாழக்காய்பட்டி சாலையில் உள்ள முத்தமிழ் நகரில், முறையான ஓடை இல்லாததால் மழைநீர் வெளியேற முடியாமல் சாலைகளில், முழங்கால் அளவுக்கு தேங்கியுள்ளது. இதனால் இரவு நேரங்களில் வீடுகளுக்குள் பாம்பு மற்றும் விஷப்பூச்சிகள் வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து முறையிட்டும் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளனர்.