திருச்சி மாவட்டம் சூரியூர் ஜல்லிகட்டு மழையால் ஒத்திவைப்பு - வரும் 20-ம் தேதி நடத்த மாவட்ட ஆட்சியர் அனுமதி
Jan 14 2021 5:10PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சி மாவட்டம் சூரியூர் ஜல்லிக்கட்டு மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சூரியூரில் நாளை ஜல்லிக்கட்டு நடத்த அரசு அனுமதி அளித்தது. இந்நிலையில், மழை காரணமாக ஜல்லிக்கட்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 20ம் தேதி ஜல்லிக்கட்டு நடத்த விழா கமிட்டியினர் அளித்த மனுவை மாவட்ட ஆட்சியர் ஏற்று, அதற்கு அனுமதி அளித்துள்ளார். திருச்சி மாவட்டத்தில் சூரியூர் உள்ளிட்ட 4 இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரப்பட்ட நிலையில், சூரியூரில் மட்டுமே ஜல்லிக்கட்டு நடத்த அரசு அனுமதியளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.