புதுச்சேரியில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள துணை ராணுவப் படையினர் பொங்கல் கொண்டாட்டம்
Jan 14 2021 5:14PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுச்சேரியில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள துணை ராணுவப் படையினர் பொங்கல் திருநாளை கொண்டாடினர்.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை புதுச்சேரியில் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த வாரம் காங்கிரஸாரின் தர்ணா போராட்டம் காரணமாக, ஆளுநர் மாளிகை, சட்டப்பேரவை அமைந்துள்ள பகுதிகளில், 300க்கும் மேற்பட்ட துணை ராணுவப் படையினர், பாதுகாப்புக்காக பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்நிலையில், பணி தொடர்வதால் கலங்கரை விளக்கு பகுதியில் உள்ள கடற்கரை அருகே பாரம்பரிய முறைப்படி மண் பானையில் பொங்கல் வைத்து துணை ராணுவப் படையினர் பொங்கல் கொண்டாடினர்.