டாக்‍டர் எம்.ஜி.ஆரின் 104-வது பிறந்த நாள் இன்று கோலாகல கொண்டாட்டம் : சென்னை அண்ணா சாலையில் உள்ள திருவுருவச் சிலைக்‍கு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் டிடிவி தினகரன்

Jan 17 2021 2:37PM
எழுத்தின் அளவு: அ + அ -
புரட்சித்தலைவர் டாக்‍டர் எம்.ஜி.ஆரின் 104-வது பிறந்தநாளையொட்டி, சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்‍கு, அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

ஏழை-எளிய மக்களின் இதய நாயகர், எத்தனை ஆண்டுகள் ஆனாலும் ஏழைகளின் நெஞ்சங்களில் நீக்கமற நிறைந்திருப்பவர், சாதாரண மக்களின் மேம்பாட்டிற்காகவும், அனைவரும் கல்வியில் உயர்வு பெறுவதற்காகவும் அற்புதமான திட்டங்களைக் கொண்டு வந்த பொன்மனச்செம்மல், புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆரின் 104-வது பிறந்தநாள், இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

சென்னை, அண்ணா சாலையில் அமைந்துள்ள டாக்‍டர் எம்.ஜி.ஆரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதற்காக வருகை தந்த, அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரனுக்‍கு வழிநெடுகிலும் கழக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்‍கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதைத்தொடர்ந்து, அண்ணா சாலையில் அமைந்துள்ள டாக்‍டர் எம்.ஜி.ஆரின் திருவுருவச் சிலைக்கு, அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில், கழக துணைப் பொதுச்செயலாளர்கள் திரு. P. பழனியப்பன், திரு. M. ரங்கசாமி, திரு.G. செந்தமிழன், கழக துணைத்தலைவர் நாமக்கல் திரு. எஸ்.அன்பழகன், கழக பொருளாளர் திரு. R. மனோகரன், கழக தலைமை நிலையச் செயலாளர்கள் திரு. K.K. உமாதேவன், திரு. சண்முகவேலு, கழக தேர்தல் பிரிவுச் செயலாளர்கள் திரு.S.V.S.P. மாணிக்கராஜா, திரு. N.G.பார்த்திபன், கழக ஆட்சி மன்றக்குழு தலைவர் திரு. R.R. முருகன், கழக கொள்கை பரப்புச் செயலாளர் செல்வி. C.R. சரஸ்வதி, கழக அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயலாளர் ரயில்வே திரு.பரமநாதன், கழக மகளிர் அணிச் செயலாளர் திருமதி வளர்மதி ஜெபராஜ், கழக பொறியாளர் அணி செயலாளர் திரு.கரிகாலன், கழக எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் திரு. டேவிட் அண்ணாதுரை, கழக அம்மா பேரவை செயலாளர் திரு. மாரியப்பன் கென்னடி, கழக சிறுபான்மை பிரிவு செயலாளர் திரு.தம்பி இஸ்மாயில், கழக அமைப்புசாரா ஓட்டுநர் அணி செயலாளர் திரு.குட்வில் குமார், கழக மீனவர் அணி செயலாளர் திரு. ஆறுமுகம், கழக இளம்பெண்கள் பாசறை செயலாளர் திருமதி. கிருஷ்ணா ராதா கிருஷ்ணன், கழக வர்த்தகர் பிரிவுச் செயலாளர் திரு.சௌந்தரபாண்டியன், கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர்கள் திரு. முத்துகுமார், திருமதி.ஜெமீலா, கழக சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பிரிவு செயலாளர் திரு.தாம்பரம் நாராயணன் உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00