சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற குடியரசு தின ஒத்திகை - காவல் மற்றும் தீயணைபுத் துறையினர் பங்கேற்பு

Jan 20 2021 12:21PM
எழுத்தின் அளவு: அ + அ -
குடியரசு தினத்தையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில், காவல் மற்றும் தீயணைபுத்துறை சார்பில் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

நாட்டின் 72வது குடியரசு தின விழா வரும் 26ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. குடியரசு தினத்திற்கு முன்பு மூன்று நாட்கள் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதன்படி, சென்னை மெரினா காமராஜர் சாலையில் உள்ள காந்தி சிலை அருகே முதல் நாள் ஒத்திகை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. காவல், கடலோர காவல்படை, குதிரைப்படை, தீயணைப்புத்துறையும் அணிவகுப்பு ஒத்திகையில் பங்கேற்றன. கமாண்டோ, ஊர்காவல் படை ஆகியவற்றின் ஒத்திகை அணிவகுப்பும் நடைபெற்றது. இதேபோல் மோட்டார் சைக்கிளில் காவல்துறையினரின் அணிவகுப்பு ஒத்திகையும் இதில் இடம்பெற்றது. வரும் 22ம் தேதி இரண்டாம் ஒத்திகையும் 24-ம் தேதி மூன்றாம் ஒத்திகை நிகழ்ச்சியும் நடைபெற உள்ளன. ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறும் நேரத்தில், மெரினா காமராஜர் சாலையில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு, மாற்றம் செய்யப்படும்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00