கன்னியாகுமரியில் போலீஸ் உடையணிந்து நகை வியாபாரியிடம் சுமார் ரூ.80 லட்சம் கொள்ளையடித்த நபர்கள் கைது

Jan 20 2021 5:08PM
எழுத்தின் அளவு: அ + அ -
கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகே, சினிமா பாணியில் போலீஸ் உடையணிந்து நகை வியாபாரியிடம் சுமார் 80 லட்சம் ரூபாய் கொள்ளையடித்த நபர்களை, 15 மணி நேரத்திற்குள் காவல்துறையினர் கைது செய்தனர்.

கேரள மாநிலம் நெய்யாற்றிகரை பகுதியை சேர்ந்த சம்பத் என்பவர் நகைக்கடை நடத்தி வருவதோடு, தமிழகம் மற்றும் கேரளாவில் உள்ள நகைக்கடைகளுக்கு மொத்தமாக நகை விற்பனை செய்து வருகிறார். நாகர்கோவிலில் உள்ள சில கடைகளுக்கு நகை விற்பனை செய்துவிட்டு, விற்பனைத் தொகையான 76 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயை எடுத்துக் கொண்டு, சம்பத் தனது காரில் கேரளா திரும்பியுள்ளார். தக்கலை அருகே காரவிளை பகுதியில், தேசிய நெடுஞ்சாலை சென்று கொண்டிருந்தபோது, போலீஸ் உடையணிந்த மர்ம நபர்கள் 4 பேர், அவரது காரை வழிமறித்து, பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். இதனைத் தொடர்ந்து, சம்பத் அளித்த புகாரின் அடிப்படையில், 4 தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை தேடிய போலீசார், திருவனந்தபுரத்தில் பதுங்கியிருந்த 4 கொள்ளையர்கள் மட்டும் ஓட்டுநர் என 5 பேரை கைது செய்தனர். கொள்ளையடிக்கப்பட்ட பணம் 76 லட்சத்து 40 ஆயிரம், கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்ட கார், போலீஸ் உடை மற்றும் செல்போன்கள், பறிமுதல் செய்யப்பட்டன.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00