சென்னையில் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் : இந்திய அணி வீரர்கள், வரும் 27-ம் தேதி சென்னை வருகை

Jan 25 2021 9:55AM
எழுத்தின் அளவு: அ + அ -
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ள இந்திய அணி வீரர்கள், வரும் 27-ம் தேதி, சென்னை வருகிறார்கள்.

இந்திய கிரிக்கெட் அணி, அண்மையில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கிலும், 20 ஓவர் தொடரை 2-1 என்ற கணக்கிலும் இந்தியா கைப்பற்றியது. ஒருநாள் தொடரை மட்டும் 1-2 என்ற கணக்கில் இழந்தது.

இந்நிலையில், இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து அணி, 4 டெஸ்ட், ஐந்து 20 ஓவர் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியை எதிர்கொள்கிறது. முதல் 2 டெஸ்ட் போட்டிகள், சென்னையிலும், 3-வது மற்றும் 4-வது டெஸ்ட் போட்டிகள், அகமதாபாத்தில் நடைபெற உள்ளன.

முதல் டெஸ்ட், வரும் 5-ம் தேதி முதல் 9-ம் தேதி வரையும், 2-வது டெஸ்ட், 13-ம் தேதி முதல் 17-ம் தேதி வரையும் நடைபெறுகிறது. முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் இந்திய வீரர்கள், பல்வேறு நகரங்களில் இருந்து, வரும் 27-ம் தேதி சென்னை வருகிறார்கள். அவர்கள் சென்னை வந்தவுடன் கொரோனா தடுப்பு பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்படுவார்கள். ஒரு வாரம் தனிமைப்படுத்தப்பட்ட பின்னர், பயிற்சியை தொடங்குவார்கள்.

இதேபோல, அதே தினத்தில், இலங்கையில் இருந்து இங்கிலாந்து அணியும் சென்னை வருகிறது. இங்கிலாந்து வீரர்களும் கொரோனா பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்படுவார்கள்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00