தமிழக அரசின் கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தில் பயனாளிகளிடம் தலா ஏழாயிரத்து 500 வசூல் செய்த அதிகாரிகள் - லஞ்ச ஒழிப்புத்துறையினரின் அதிரடி சோதனை

Jan 25 2021 10:44AM
எழுத்தின் அளவு: அ + அ -

நாகை அருகே தமிழக அரசின் கறவை மாடுகள் வழங்கியதில் பயனாளிகளிடம் தலா 7 ஆயிரத்து 500 ரூபாய் வசூல் செய்தது, லஞ்ச ஒழிப்புத் துறையினரின் அதிரடி சோதனை மூலம் தெரியவந்துள்ளது.

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் மருங்கூர் ஊராட்சியில், தமிழக அரசின் விலையில்லா கறவைப் பசு வழங்கும் திட்டத்தின் கீழ் 50 பயனாளிகளுக்கு 37 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்பில் விலையில்லா பசு வழங்கப்பட்டது. அதில் கால்நடை பராமரிப்பு துறையின் அலுவலர்களுக்கு தலா 7 ஆயிரத்து 500 வீதம் பயனாளிகளிடம் இருந்து வசூல் செய்யப்படுவதாக நாகை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து கொத்தமங்கலம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் சோதனை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்புதுறை போலீசார், மருங்கூர் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் உட்பட, கால்நடை பராமரிப்புத் துறை அலுவலர்களை கையும் களவுமாக பிடித்தனர். பின்னர் அவர்களிடமிருந்து கணக்கில் வராத 3 லட்சத்து 73 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00