நாட்டின் மிகப்பெரிய சக்‍தியாகத் திகழ்ந்த பொருளாதாரத்தை மத்திய பா.ஜ.க அரசு சிதைத்துவிட்டது - கரூர் தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி கடும் தாக்கு

Jan 25 2021 12:42PM
எழுத்தின் அளவு: அ + அ -
நாட்டின் மிகப்பெரிய சக்‍தியாகத் திகழ்ந்த பொருளாதாரத்தை மத்திய பா.ஜ.க அரசு சிதைத்துவிட்டதாக, கரூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழகத்தில் திரு.ராகுல் காந்தி பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். கரூரில் பொதுமக்‍களிடையே உரையாற்றிய அவர், கடந்த 6 ஆண்டுகளில், பிரதமர் திரு.நரேந்திர மோதி, நாட்டை பலவீனப்படுத்தியதுடன், பிரிவினைவாதத்தை உருவாக்‍கியதாக குற்றம் சாட்டினார். நாட்டின் மிகப்பெரும் சக்‍தியாகத் திகழ்ந்த பொருளாதாரத்தை மத்திய பா.ஜ.க அரசு சிதைத்துள்ளதாக அவர் கண்டனம் தெரிவித்தார். பிரதமரின் தவறான நடவடிக்‍கைகளால், நாட்டிலுள்ள இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி தவித்து வருவதாகவும் கூறினார். இந்திய விவசாயத்தை அழிக்‍கும் வகையில் 3 சட்டங்களை கொண்டு வந்த பிரதமர் திரு.மோதி, பெருமுதலாளிகள் வசம் விவசாயத்தையே ஒப்படைத்துள்ளதாகக் விமர்சித்தார். எந்தவொரு பிரச்னைக்‍காகவும் விவசாயிகள் நீதிமன்றத்தைகூட நாட முடியாத நிலையை புதிய வேளாண் சட்டம் தெளிவாக உணர்த்துவதாகவும், திரு.ராகுல் காந்தி தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00