திருவண்ணாமலை அருகே கள்ளச்சாராய விற்பனையை தொடர்ந்து, கஞ்சா விற்பனையும் அதிகரிப்பு - போதைக்கு பள்ளிச் சிறுவர்கள் அடிமையாகி வருவதாக, பொதுமக்கள் வேதனை

Jan 25 2021 2:30PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சுற்று வட்டார பகுதிகளில், கள்ளச்சாராய விற்பனையை தொடர்ந்து, கஞ்சா விற்பனையும் அதிகரித்துள்ளதால், போதைக்கு பள்ளிச் சிறுவர்கள் அடிமையாகி வருவதாக, பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

செங்கம் சுற்றுவட்டார பகுதிகளில், இளைஞர்கள் மற்றும் பள்ளி சிறுவர்கள் மத்தியில் அதிகளவில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கூறப்படுகிறது. இதற்கு ஆதாரமாக, செங்கம் பகுதியைச் சேர்ந்த பள்ளி சிறுவர்கள், கூட்டாக அமர்ந்து தண்ணீர் கேனை பயன்படுத்தி கஞ்சாவை புகைக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால், போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்ப்பதாகவும், செங்கம் உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்பவர்கள் மீது ஒரு வழக்கு கூட பதிவு செய்யப்படவில்லை என்றும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். போதைக்கு சிறுவர்கள் அடிமையாவதை தடுக்க, கள்ளச்சாராயம் மற்றும் கஞ்சா விற்பவர்கள் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென, செங்கம் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00