தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் - கூட்டத்தொடரை புறக்கணித்து தி.மு.க., காங்கிரஸ் வெளிநடப்பு
Feb 23 2021 12:56PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழக இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடரை புறக்கணித்து திமுக உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
தமிழக இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. அவையில், துணை முதலமைச்சர் திரு.ஓ.பன்னீர்செல்வம் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு முன்பாகவே திமுகவைச் சேர்ந்த திரு. துரைமுருகன் பேச வாய்ப்பு கோரினார். இதற்கு சபாநாயகர் அனுமதி மறுக்கவே, திமுகவினர் அமளியில் ஈடுபட்டு அவையில் கூச்சல் குழப்பத்தை ஏற்படுத்தினர். பின்னர் இடைக்கால பட்ஜெட் உரையை புறக்கணித்து திமுக எம்.எல்.ஏ.கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அவர்களை தொடர்ந்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் வெளிநடப்பு செய்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திரு.துரைமுருகன், பட்ஜெட் கூட்டத் தொடர் முழுவதையும் திமுக புறக்கணிப்பதாக தெரிவித்தார்.