தனியார் மற்றும் கோயில்களில் வளர்க்கப்படும் யானைகள் பராமரிப்பை உறுதி செய்யும் புதிய விதிமுறைகளை வகுக்க வேண்டும் - தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
Feb 23 2021 1:26PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தனியார் மற்றும் கோயில்களில் வளர்க்கப்படும் யானைகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா? என்பதை உறுதி செய்யும் வகையில், புதிய கொள்கை மற்றும் விதிமுறைகளை வகுக்க வேண்டுமென தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஸ்ரீரங்கத்தில் முறையான காரணங்கள் இல்லாமல் பாகன்கள் வெளியேற்றப்பட்டதை எதிர்த்து திரு.ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி, யானைகளை சித்ரவதை செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், விலங்குகளிடம் கருணை காட்டாத ஒருவனுக்கு நாமும் கருணை காட்டக்கூடாது என்றும் தெரிவித்தார். புதிய கொள்கை மற்றும் விதிமுறைகளை வகுப்பது குறித்து 8 வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.