உதவித் தொகையை உயர்த்தக்கோரி காஞ்சிபுரம் தாலுகா அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகள் போராட்டம்
Feb 23 2021 5:13PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகையை 3 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கக்கோரி, அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் காஞ்சிபுரம் தாலுகா அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடல் ஊனம் 70 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித் தொகை 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும், தனியார் துறையில் மாற்றுத் திறனாளிகளுக்கு 5 சதவீதம் வேலை வாய்ப்பு இடங்களை உத்தரவாதப்படுத்த சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.