சட்டப்பேரவை இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் பிப். 25 முதல் 27 வரை நடைபெறும் - சபாநாயகர் தனபால் அறிவிப்பு
Feb 23 2021 3:58PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழக சட்டப்பேரவை இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 27ம் தேதி வரை, 3 நாட்கள் நடைபெறும் என சபாநாயகர் திரு.ப.தனபால் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், சட்டப்பேரவை கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்த அலுவல் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் திரு.ப.தனபால், இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 25ம் தேதிமுதல் 27ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெறும் என தெரிவித்தார். 25, 26-ம் தேதிகளில் இடைக்கால பட்ஜெட் மீதான பொது விவாதமும், 27-ம் தேதி இடைக்கால பட்ஜெட் மீதான பொது விவாதத்திற்கு பதிலுரை நடைபெறும் என்றும் சபாநாயகர் திரு.தனபால் கூறினார்.