காஞ்சிபுரம் மாவட்ட தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆட்சியர் அலுவலகம் அருகே சாலை மறியல்
Feb 23 2021 4:42PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காஞ்சிபுரம் மாவட்ட தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர், ஆட்சியர் அலுவலகம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். சத்துணவு ஊழியர்களை முழு நேர அரசு ஊழியர்களாக்க வேண்டும் - சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 200-க்கும் மேற்பட்ட சத்துணவு பணியாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.