வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே சாலையில் தண்ணீர் கசிந்து பள்ளம் - பொதுமக்கள் சாலை மறியல்
Feb 23 2021 4:50PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே சாலை போடுவதற்காக தோண்டப்பட்ட பள்ளம் மூடப்படாததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். காட்பாடி அடுத்த கிளித்தான்பட்டறை பகுதியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் சாலை அமைக்கும் பணி கடந்த 8 மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது. அதற்காக தோண்டப்பட்ட பள்ளம் சரிவர மூடப்படாததால் கடந்த எட்டு மாத காலமாக தண்ணீர் கசிந்து பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இதனையடுத்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.