சீர்காழி அருகே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் கோரி விவசாயிகள் சாலை மறியல்
Feb 23 2021 4:51PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே, புயல் மற்றும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்கப்படாததை கண்டித்து, விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற சீர்காழி தாசில்தார் ஹரிதரன், கொள்ளிடம் வேளாண்மை துறை உதவி இயக்குனர் சுப்பையன் உள்ளிட்ட அதிகாரிகையும் முற்றுகையிட்ட விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.