பழனியை அடுத்த அமராவதி ஆற்றில் கலக்கும் சாய ஆலைக்கழிவுநீர் - நோய் பரவும் ஆபத்து
Feb 23 2021 4:52PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த அமராவதி ஆற்றில் சாய ஆலைக்கழிவு நீர் நேரடியாக கலப்பதால் ஆற்றில் குளிப்பவர்களுக்கும், ஆற்று நீரை பயன்படுத்துவோருக்கும் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பழனியை அடுத்துள்ள சாமிநாதபுரத்தில் உள்ள ஆலைகளில் இருந்து இரவு நேரங்களில் ரசாயன கழிவு நீர் வெளியேற்றப்பட்டு அமராவதி ஆற்றில் நேரடியாக கலக்கிறது. அமராவதி ஆறு, திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களுக்கும், திருப்பூர் மாவட்டத்திற்கும் முக்கியமாக நீராதாரமாக விளங்கும் நிலையில், சாய ஆலைக்கழிவுகளால் நோய் பரவும் ஆபத்து உள்ளது.