நிலக்கரி இறக்குமதி டெண்டருக்கு தடை விதிக்கக்கோரிய வழக்கு - நாளை சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
Feb 23 2021 4:56PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வெளிநாடுகளில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்வது தொடர்பான டெண்டருக்கு தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் உத்தரவு பிறப்பிக்கும் வரை, டெண்டரை திறக்கக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆயிரத்து 330 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த டெண்டருக்கு வெறும் 15 நாட்கள் மட்டுமே தரப்பட்டதாகக்கோரி, வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. டெண்டர் நிபந்தனைகளில் விதிமீறல் உள்ளதாக மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. நாளை இவ்வழக்கில் உத்தரவு பிறப்பிப்பதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.