காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம்
Feb 23 2021 5:01PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் திருவள்ளூர், திருச்சி, அரியலூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல மாவட்டங்களில் போராட்டம் நடத்தப்பட்டது.
அங்கன்வாடி ஊழியர்களை முழு நேர அரசு ஊழியர்களா அறிவித்து, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், அங்கன்வாடி ஊழியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட இந்த போராட்டத்தில், ஊழியர்கள் கருப்பு உடை அணிந்துதபடி கலந்து கொண்டனர். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 300-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் அரியலூர், திருச்சி, கிருஷ்ணகிரி, கரூர், தூத்துக்குடி, நெல்லை, சேலம், ராமநாதபுரம், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் அங்கன்வாடி ஊழியர்கள் கருப்பு உடை அணிந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.