திண்டுக்கல் மாவட்டத்தில் சென்னையை விட கூடுதலான விலைக்கு பெட்ரோல் விற்கப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி
Feb 23 2021 6:32PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் சென்னையை விட கூடுதலான விலைக்கு பெட்ரோல் விற்கப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்றைய நிலவரப்படி சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டர் 92 ரூபாய் 90 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இன்று, 1 லிட்டர் பெட்ரோல் 95 ரூபாய்க்கு விற்கப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர். பெட்ரோல் விலை உயர்வால், பால், காய்கறிகள், எண்ணைய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை பெருமளவு உயர்ந்துள்ளது. கொடைக்கானல் மலைப்பகுதிக்கு, பழனி, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளிலில் இருந்து அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன. தற்போது பெட்ரோல்-டீசல் விலை உயர்வால், அத்தியாவசியப் பொருட்கள் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
பெட்ரோல் விலை நூறு ரூபாயை நெருங்கி வருவதைக் கண்டித்து, கொடைக்கானலில் வாகன ஓட்டிகள், தங்களது இருசக்கர வாகனத்திற்கு மாலை அணிவித்து ஒப்பாரி வைத்து, நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்தாத மத்திய-மாநில அரசுகளுக்கு பொதுமக்கள் கண்டனம் தெரிவித்தனர்.