கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு சத்துணவு ஊழியர்கள் போராட்டம்
Feb 23 2021 5:14PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சத்துணவு ஊழியர்களை அரசு ஊழியராக அறிவிக்கவேண்டும், சத்துணவு மையங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, 300க்கும் மேற்பட்ட சத்துணவு பணியாளர்கள் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கருப்பு உடை அணிந்து, கோரிக்கைகளை வலியுறுத்தி, பேரணியாகச் சென்ற சத்துணவு ஊழியர்களை போலீசார் கைது செய்தனர். கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிட்டால் போராட்டம் தொடரும் என அவர்கள் எச்சரித்தனர்.