இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் காலமானார் - சென்னை ராஜிவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்தது

Feb 26 2021 11:11AM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் திரு. தா. பாண்டியன் உடல்நலக்‍ குறைவால் இன்று காலமானார். அவருக்‍கு வயது 89.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு.தா.பாண்டியன் அண்மைக்காலமாக உடல்நலம் குன்றியிருந்தார். நேற்று முன்தினம் அவரது உடல்நிலை மோசமானது. இதையடுத்து, சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது பொது மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். சிறுநீரக கோளாறு, ரத்த அழுத்தம் ஆகியவற்றுக்காக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டடது. இந்நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி திரு. தா. பாண்டியனின் உயிர் பிரிந்தது. அரசு மருத்துவமனையில் இருந்து அவரது உடல், சென்னை அண்ணாநகரில் உள்ள அவரது வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு, பொதுமக்‍களின் அஞ்சலிக்‍காக வைக்‍கப்படுகிறது. இதனை தொடர்ந்து சென்னை தியாகராயநகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகமான பாலன் இல்லத்தில் பொதுமக்‍கள் அஞ்சலிக்‍காக பிற்பகல் 2​- மணி முதல் 7-மணி வரை வைக்‍கப்படுகிறது. ​பின்னர் திரு. தா.பாண்டியனில் உடல் அவரது சொந்த ஊரான உசிலம்பட்டி அருகே உத்தமபாளையத்தில் உள்ள வெள்ளைமலைக்‍கு எடுத்து செல்லப்படுகிறது. அங்குள்ள​டேவிட் பண்ணையில் திரு. தா.பாண்டியனின் உடல் நாளை அடக்‍கம் செய்யப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00