தா. பாண்டியன் மறைவுக்‍கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் - பொதுவுடமை இயக்கத்திற்கு பேரிழப்பு என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட தலைவர்கள் வேதனை

Feb 26 2021 1:28PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான திரு. தா. பாண்டியன் மறைவுக்‍கு, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ம.தி.மு.க பொதுச் செயலாளர் திரு. வைகோ வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தா.பாண்டியன் மறைவு பொதுவுடைமை இயக்கத்திற்கும், தமிழக பொது வாழ்விற்கும், இலக்கிய உலகிற்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு என வேதனை தெரிவித்துள்ளார். இதேபோல், தி.மு.க தலைவர் திரு. மு.க. ஸ்டாலின், தே.மு.தி.க. தலைவர் திரு. விஜயகாந்த், மக்‍கள் நீதிமைய கட்சியின் தலைவர் திரு. கமல்ஹாசன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா, தமிழ்நாடு ஃபார்வர்ட் பிளாக் கட்சியின் மாநிலச் செயலாளர் டாக்‍டர் D.கணேசன் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். பொதுவுடைமைப் போராளி தா.பாண்டியனின் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும் எனவும் வேதனை தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00