அரசு போக்குவரத்து ஊழியர்கள் 2-ம் நாளாக போராட்டம் - குறைந்த எண்ணிக்கையில் இயக்கப்படுவதால் பொதுமக்கள் அவதி

Feb 26 2021 3:12PM
எழுத்தின் அளவு: அ + அ -
அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், பொதுப்போக்குவரத்தை பயன்படுத்துவோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

நிலுவை தொகையை வழங்க வலியுறுத்தி, சிஐடியு உள்ளிட்ட 9 சங்கங்களைச் சேர்ந்த அரசு போக்குவரத்து ஊழியர்கள், இன்று 2வது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், ஈரோடு மாவட்டத்தில் 13 பணிமனைகளில் உள்ள 800 பேருந்துகளில் 400 பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டதால், பள்ளி-கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலைக்குச் செல்வோர் சிரமத்திற்கு உள்ளாகினர்.

கரூர் மண்டலத்தில், 293 அரசு பேருந்துகளில் ஒருசில பேருந்துகள் தவிர்த்து, மற்ற அனைத்து பேருந்துகளும் இயக்கப்பட்டன. அண்ணா தொழிற்சங்க ஊழியர்கள் மற்றும் பிற தொழிலாளர்களை கொண்டு அனைத்து பேருந்துகளும் இயக்கப்பட்டதால், போக்குவரத்து சேவையில் பாதிப்பு ஏற்படவில்லை.

புதுக்கோட்டை மாவட்டத்தில், 9 பணிமனைகளில் உள்ள 384 பேருந்துகளில் நேற்று 10 சதவீத பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்நிலையில், இன்று 8 சதவீத பேருந்துகளே இயக்கப்பட்டதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில், 586 பேருந்துகளில் சுமார் 5 சதவீத பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. இதனால், பேருந்து நிலையத்தில் பேருந்துகளுக்காக பயணிகள் பலமணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனினும், தனியார் பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்பட்டன.

செங்கல்பட்டு மாவட்டத்தில், போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தால் அனைத்து பேருந்துகளும் பணிமனைகளில் நிறுத்தி வைக்கப்பட்டன. அரசு பேருந்துகள் இயக்கப்படாததால் போக்குவரத்து சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00