தமிழகம் முழுவதும் உள்ள, 49 சுங்கச் சாவடிகளில், தீவிர வாகன சோதனை - மாவட்ட தேர்தல் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

Mar 1 2021 10:42AM
எழுத்தின் அளவு: அ + அ -

மாநிலம் முழுதும் உள்ள சுங்கச்சாவடிகளில், போலீசாருடன் இணைந்து, தேர்தல் அதிகாரிகள், வாகன சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

தமிழக சட்டசபை தேர்தல், ஏப்ரல் 6ல் நடக்க உள்ளதால், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதன்படி, 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல், ரொக்கம் எடுத்துச் செல்ல கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக, பாத்திரங்கள், வீட்டு உபயோக பொருட்கள், வேட்டி, சேலைகள் உள்ளிட்ட பொருட்களை எடுத்துச் செல்லவும் வாய்ப்புள்ளது. எனவே, தமிழகம் முழுதும் உள்ள, 49 சுங்கச் சாவடிகளில், போலீசாருடன் இணைந்து, மாவட்ட தேர்தல் அதிகாரிகள், வாகன சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

தருமபுரி அருகே சேலம் தேசிய நெடுஞ்சாலையில் காரில் கொண்டு சென்ற ரொக்கம் ரூபாய் 2 லட்சத்து 95 ஆயிரத்தை தர்மபுரி பறக்கும் படையினர் கைப்பற்றி பறிமுதல் செய்துள்ளனர்.

தூத்துக்குடி திருச்செந்தூர் சாலையில் காமராஜ் கல்லூரி அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர் அப்போது வாகனத்தில் பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா என்பது குறித்து போலீசார் தீவிரமாக சோதனை நடத்தினர் மேலும் வாகன சோதனையை முழுமையாக வீடியோ பதிவும் செய்யப்பட்டது இதேபோல் மாவட்டம் முழுவதும் வாகன சோதனை நடத்தப்பட்டு வருவதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00