பெரம்பலூர் அருகே, அனுமதியின்றி போடப்பட்ட மின்வேலியில் சிக்கிய மான்கள் - தீ வைத்து எரித்த இருவரை கைது செய்தது வனத்துறை

Mar 7 2021 5:35PM
எழுத்தின் அளவு: அ + அ -
பெரம்பலூர் அருகே, விவசாய நிலத்தில் அனுமதியின்றி போடப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கிய மான்களை தீ வைத்து எரித்த 2 பேரை வனத்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரம்பலூர் அருகே உள்ள அரணாரை கிராமத்தை சேர்ந்த பன்னீர்செல்வம், ராஜமாணிக்கம் ஆகியோர், தங்கள் விளைநிலங்களில் அனுமதியின்றி மின்வேலி அமைத்துள்ளனர். பயிர்களை வனவிலங்குகள் சேதப்படுத்துவதை தடுப்பதற்காக போடப்பட்டிருந்த மின்வேலியில் நேற்றிரவு 2 மான்கள் சிக்கி உயிரிழந்துள்ளன. காலையில், மான்கள் இறந்து கிடந்ததை கண்ட விவசாயிகள் இருவரும், அவற்றை அப்புறப்படுத்தி உள்ளனர். அப்போது, இறந்த பெண் மானின் வயிற்றில் இருந்து குட்டி வெளியே வந்துள்ளது. உயிரிழந்து கிடந்த 2 மான்களுடன் குட்டியையும் சேர்த்து, வயலுக்கு அருகே இருவரும் எரித்துவிட்டு, அங்கிருந்து சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அந்த வழியாக சென்ற சிலர், 3 மான்கள் எரிந்த நிலையில் இருந்ததை கண்டு, வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து நேரில் சென்ற வனத்துறையினர், பன்னீர்செல்வம் மற்றும் ராஜமாணிக்கம் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00