நெல்லை அருகே கணவன், மனைவி வெட்டிக்‍கொலை : மாமனார் சரண் - தலைமறைவாக உள்ள மற்றொரு நபருக்‍கு போலீசார் வலைவீச்சு

Apr 7 2021 8:37PM
எழுத்தின் அளவு: அ + அ -
நெல்லை அருகே கணவன், மனைவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மாமனார் சரணடைந்த நிலையில், தலைமறைவான ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

நெல்லை மாவட்டம் பாப்பாகுடி அருகே நத்தம்தட்டை கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளியான புலவேந்திரனின் மகள் மஞ்சு, மருமகன் சிறுத்தைசெல்வத்திற்கு 2 வயதில் குழந்தை உள்ளது. இந்நிலையில், குழந்தை சாலையில் தனியாக விளையாடிக்‍ கொண்டிருந்ததால் சிறுத்தைசெல்வம், அதுகுறித்து மாமனாரிடம் கேட்டுள்ளார். இதனால் ஆவேசமடைந்த புலவேந்திரன், அரிவாளை எடுத்து வந்து செல்வத்தை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சிறுத்தைசெல்வம் உயிரிழந்தார். இதையடுத்து, அவரது மனைவி மஞ்சு அழுதுகொண்டிருந்தபோது, அங்கு வந்த செல்வத்தின் நண்பர் மாடசாமி, மஞ்சுவை சரமாரியாக வெட்டியதில், மஞ்சு சம்பவ இடத்தில் உயிரிழந்தார். சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், இருவரது உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்‍காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்‍கு அனுப்பி வைத்தனர். புலவேந்திரன், மாடசாமி இருவரும் தலைமறைவான நிலையில், புலவேந்திரன் காவல்நிலையத்தில் சரணடைந்தார். கணவன் மனைவி வெட்டிக்‍கொல்லப்பட்ட சம்பவம், நத்தம்தட்டை கிராமத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00