சீர்காழி அருகே மது போதையில் தனது வீட்டுக்கே தீ வைத்த இளைஞர் - விஷமச் செயலில் ஈடுபட்ட நபரை கைது செய்து போலீஸ் நடவடிக்கை

Apr 8 2021 10:55AM
எழுத்தின் அளவு: அ + அ -
சீர்காழி அருகே, குடிபோதையில் சொந்த வீட்டுக்கே தீ வைத்த இளைஞரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த செம்மங்குடி தெற்கு தெருவை சேர்ந்த லாரி ஓட்டுநரான செல்வமணி என்பவர், குடிபோதையில் வீட்டில் உள்ளவர்களிடம் தகராறு செய்துள்ளார். மேலும் தெருவில் உள்ளவர்களிடமும் சண்டை போட்டு ரகளையில் ஈடுபட்டார். மதுபோதை தலைக்‍கேறிய நிலையில், தனது வீட்டுக்‍கு அவரே தீ வைத்துவிட்டு, அதனை வேடிக்‍கை பார்த்துள்ளார். தீ மளமளவென பரவி வீடு எரிந்து கொண்டிருந்த நிலையில், அக்‍கப்பக்‍கத்தினர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர்,தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தில் வீட்டின் முன்புறம் முற்றிலுமாக எரிந்த நிலையில், உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், செல்வமணியை கைதுசெய்து, காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மதுபோதையில், தனது வீட்டுக்கு தானே தீ வைத்த சம்பவம், அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00