10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்படும் என வெளியான தகவல் தவறானது என பள்ளிக்கல்வித்துறை மறுப்பு - மாணவர்களை மனதளவில் பாதிக்‍கும் செயலில் யாரும் ஈடுபடவேண்டாம் என வேண்டுகோள்

Apr 21 2021 1:07PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகத்தில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி அளவில் தேர்வுகள் நடத்தப்படும் என்று வெளியான தகவல் தவறானது என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. மாணவர்களை மனதளவில் பாதிக்‍கும் செயலில் யாரும் ஈடுபடவேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், தேர்ச்சி மதிப்பெண்ணை காட்டிலும், அதிக மதிப்பெண் பெற விரும்பும் 10 வகுப்பு மாணவர்களுக்காக தேர்வு நடத்தப்படும் என தகவல் வெளியானது. தேர்ச்சி மதிப்பெண் போதும் என கருதும் மாணவர்கள் தேர்வுகளை எழுத வேண்டிய அவசியமில்லை என்றும், அதைக்காட்டிலும் கூடுதல் மதிப்பெண்களை பெற விரும்பும் மாணவர்கள் தேர்வுகளை எழுதலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.

இந்த செய்திக்‍கு மறுப்பு தெரிவித்துள்ள பள்ளிகல்வித்துறை, 10-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி வழங்கப்பட்டது முடிந்துபோன விவகாரம் என்றும், அவர்களுக்‍கு மீண்டும் தேர்வு என்பது பொய்யான தகவல் எனவும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது. பொய்யான தகவலை பரப்பி, மாணவர்களை மனதளவில் பாதிக்‍கும் செயலில் யாரும் ஈடுபடவேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுக்‍கப்பட்டுள்ளது. 10-ம் வகுப்பு மாணவர்களுக்‍கான மதிப்பெண் கணக்‍கீட்டு வழிமுறைகள் விரைவில் வெளியாகும் எனவும் பள்ளிகல்வித்துறை தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00