தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் குளிரூட்டி பழுதால் ஆக்சிஜன் உற்பத்தி நிறுத்தம் - மீண்டும் உற்பத்தியை தொடங்க 3 நாட்கள் ஆகும் என ஆலை நிர்வாகம் தகவல்

May 14 2021 11:42AM
எழுத்தின் அளவு: அ + அ -

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி நடைபெற்று வரும் நிலையில், ஆலையில் உள்ள குளிரூட்டியில் திடீரென பழுது ஏற்பட்டுள்ளதால், ஆக்சிஜன் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இந்த பழுதை சீர்செய்து மீண்டும் உற்பத்தி செய்ய 3 நாட்கள் ஆகும் என ஆலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் போராட்டம் மற்றும் கடந்த 2018-ஆம் ஆண்டு ஏற்பட்ட கலவரத்தை தொடர்ந்து தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலை, மூடப்பட்டது. இந்நிலையில், கொரோனா தொற்று காரணமாக நாட்டில் நிலவும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு இந்த ஆலையில் வரும் ஜூலை மாதம் வரை ஆக்சிஜனை மட்டும் தயார் செய்து கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் அண்மையில் அனுமதி வழங்கியது. இதனையடுத்து ஸ்டெர்லைட் ஆலையில் நேற்று முன்தினம் இரவு முதல் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. நேற்று சுமார் 4 புள்ளி 8 டன் திரவ ஆக்சிஜன் நிரப்பப்பட முதல் லாரி, நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஸ்டெர்லைட் ஆலையில் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி நடைபெற்று வரும் நிலையில், ஆலையில் உள்ள குளிரூட்டியில் திடீரென பழுது ஏற்பட்டுள்ளதால், ஆக்சிஜன் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. பழுதை சரிசெய்து மீண்டும் உற்பத்தி தொடங்க, இன்னும் 3 நாட்கள் ஆகும் என ஆலை நிர்வாகம் சார்பில் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00