கோவில்பட்டியில், கள்ள சந்தை விற்பனைக்காக பதுக்கப்பட்ட ரெம்டெசிவர் மருந்துகள் - மருந்து குப்பிகளை பறிமுதல் செய்து போலீஸ் நடவடிக்கை

May 14 2021 1:14PM
எழுத்தின் அளவு: அ + அ -

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், கள்ள சந்தையில் ஒரு கோடி ரூபாய்க்கு விற்பதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரெம்டெசிவிர் மருந்து குப்பிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் ரெம்டெசிவிர் மருந்து, கோவில்பட்டியில் உள்ள கிடங்கு ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டு கள்ள சந்தையில் விற்கப்படுவதாக, காவல்துறை டிஎஸ்பி கலை கதிரவனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, சுகாதார பணிகள் துணை இயக்குனர் அனிதா மற்றும் மருத்துவ குழுவினருடன், குறிப்பிட்ட அந்த கிடங்கில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 145 ரெம்டெசிவிர் மருந்து குப்பிகள் மற்றும் மருந்து பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், அவற்றை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த கடை உரிமையாளர் வெள்ளை பாண்டியன், ராஜாத்தி, சண்முகம் ஆகிய மூவரையும், போலீசார் தேடி வருகின்றனர். உயிர் காக்கும் ரெம்டெசிவிர் மருந்தை கள்ள சந்தையில் ஒரு கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய இருந்தது விசாரணையில் தெரியவந்தது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00