குறுவை பயிர்காப்பீடுக்‍கான கால அவகாசம் முடிவு - கால நீட்டிப்பு செய்ய விவசாயிகள் கோரிக்கை

Jul 31 2021 1:08PM
எழுத்தின் அளவு: அ + அ -

குறுவை பயிர் காப்பீடு தேதி முடிவடைந்த நிலையில், கால நீட்டிப்பு செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இயற்கை சீற்றங்களில் பயிர்கள் பாதிக்கப்பட்டால் பயிர் இன்சூரன்ஸ் செய்து அதன்மூலம் நிவாரணம் வழங்கும் நிலை கடந்த சில ஆண்டுகளாக வழக்கத்தில் உள்ளது. கடந்த ஆண்டு பயிர் இன்சூரன்ஸ் செய்ததற்கு மத்திய மாநில அரசுகள் தங்களது பங்கீட்டு தொகையை வழங்காத நிலையில், குறுவை மற்றும் சம்பா பயிர்கள் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இதுவரை நிவாரணம் வழங்கவில்லை. இந்த ஆண்டு குறுவை சாகுபடி இன்சூரன்ஸ் செய்வதற்கு தமிழக அரசு அறிவிப்பு வெளியிடாமலேயே அதற்கான கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது. இதனால் இந்த ஆண்டு பயிர்கள் பாதிக்கப்பட்டால் நிவாரணம் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், நாகை மாவட்ட ஆட்சியர் திரு. அருண் தம்புராஜ் தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில், குறுவை சாகுபடிக்காக கூட்டுறவு வங்கிகள் மூலமாக இதுவரை ஒருவருக்கு கூட கடன் வழங்கவில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டினர். குறுவை பயிர் காப்பீடு தேதி முடிவடைந்த நிலையில், காப்பீட்டு நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி, காப்பீடு செய்வதற்கான தேதியையும் கால நீட்டிப்பு செய்ய வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00