பெட்ரோல், டீசல் விலை உயர்வால் விவசாயிகள் வேதனை - மீண்டும் ஏர்பூட்டி உழ வேண்டிய சூழல்

Jul 31 2021 1:09PM
எழுத்தின் அளவு: அ + அ -

பெட்ரோல் - டீசல் விலை உயர்வு காரணமாக உழவு செய்வதற்கு டிராக்டரை பயன்படுத்த முடியாத மதுரை மாவட்ட விவசாயிகள், அந்தப் பணிக்கு மாடுகளை பயன்படுத்துவது தற்போது அதிகரித்து வருகிறது. மீனவர்களுக்கு வழங்கப்படுவது போன்று மானிய விலையில் விவசாயிகளுக்கும் பெட்ரோல் - டீசலை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி, அலங்காநல்லூர் உள்ளிட்டப் பகுதிகளில் முல்லைப் பெரியாறு பாசனக் கால்வாய் மூலம் சுமார் 45 ஆயிரம் ஏக்கரில் சாகுபடிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால், பெட்ரோல் - டீசல் விலை உயர்வு காரணமாக நிலங்களில் உழவு செய்வதற்கு டிராக்டரையும், நாற்று நடுவதற்கு நடவு இயந்திர சாதனத்தையும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலையுடன் தெரிவித்தனர். டிராக்டர்களுக்கு மாற்றாக பாரம்பரிய முறைப்படி உழவு மாடுகளை பயன்படுத்துவது தற்போது அதிகரித்துள்ளது. 12 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போதுதான் குறித்த காலத்தில் முல்லைப் பெரியாறு பாசனக் கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், இந்த ஆண்டில், இரண்டு போக சாகுபடிக்கு வாய்ப்பு கிடைத்துள்ள நிலையில், சாகுபடி பணிகளைத் தடையின்றி மேற்கொள்ள ஏதுவாக, மீனவர்களுக்கு வழங்கப்படுவது போன்று, தங்களுக்கும் மானிய விலையில் பெட்ரோல் - டீசலை அரசு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00