அஇஅதிமுக-விற்கு தியாகத்தலைவி சின்னம்மா தலைமை ஏற்க வேண்டும் - அஇஅதிமுக தொண்டர்கள் மனிதச் சங்கிலி அமைத்து வலியுறுத்தல்

Jul 31 2021 3:02PM
எழுத்தின் அளவு: அ + அ -
அ.இ.அ.தி.மு.க.வுக்‍கு தியாகத்தலைவி சின்னம்மா தலைமையேற்க வலியுறுத்தி, கள்ளக்‍குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில், அ.இ.அ.தி.மு.க.வினர் மனிதச்சங்கிலியில் ஈடுபட்டனர்.

அ.இ.அ.தி.மு.க.வுக்‍கு தியாகத்தலைவி சின்னம்மா தலைமையேற்க வேண்டுமென, கழக நிர்வாகிகள், தொண்டர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் அ.இ.அ.தி.மு.க.வினர் மனிதச்சங்கிலி அமைத்தனர். உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் எதிரில், கள்ளக்குறிச்சி மாவட்ட அ.இ.அ.தி.மு.க அமைப்புச் சாரா ஓட்டுநர்கள் அணி இணைச் செயலாளர் திரு.வேங்கையன் தலைமையில் நடைபெற்ற இந்த மனிதச்சங்கிலியில், ஏராளமான அ.இ.அ.தி.மு.க.வினர் கலந்துகொண்டு, கழகக்‍கொடிகளை ஏந்தியபடி, சின்னம்மா தலைமையேற்க வேண்டுமென முழக்‍கங்களை எழுப்பினர்.

மனிதச்சங்கிலியில், அ.இ.அ.தி.மு.க.வைச் சேர்ந்த டாக்டர். கூவத்தூர் அருள்பதி முருகேசன், டாக்‍டர் பரந்தாமன், திரு.ராஜேஷ், உளுந்தூர்பேட்டை ஒன்றிய எம்.ஜி.ஆர் இளைஞரணி இணைச் செயலாளர் திரு.வெங்கடேசன், உளுந்தூர்பேட்டை ஒன்றிய புரட்சித்தலைவி அம்மா பேரவை இணைச் செயலாளர்கள் திரு.ஏழுமலை, திரு.பரமசிவம் உள்ளிட்ட ஏராளமான அ.இ.அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00