ஆக்கிரமிப்பை அகற்றிய பஞ்சாயத்து தலைவர் ஊரைவிட்டு ஒதுக்கி வைப்பு - நடவடிக்‍கை எடுக்‍கக்‍கோரி பாதிக்‍கப்பட்டவர்கள் சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் மனு

Jul 31 2021 3:50PM
எழுத்தின் அளவு: அ + அ -
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே, ஆக்கிரமிப்பை அகற்றிய பஞ்சாயத்து தலைவரை, கிராம மக்கள் ஊரைவிட்டு ஒதுக்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கட்சாத்தநல்லூர் ஊராட்சி மன்றத் தலைவராக உள்ள பெருமாள் என்பவர், ஒன்றரை ஆண்டுகளுக்‍கு முன்பு, 4 ஏக்கரில் அரசு புறம்போக்கு நிலத்தை சிலர் ஆக்கிரமித்ததை அகற்றி, அம்மா விளையாட்டு மைதானத்தை உருவாக்கியுள்ளார். அவர் மீது ஆத்திரம் அடைந்த ஆக்கிரமிப்பாளர்கள், ஒன்றுசேர்ந்து கொண்டு கிராம ஊராட்சித் தலைவர் மற்றும் அவரது உறவினர்கள் என 15 குடும்பத்தினரை, ஒன்றரை ஆண்டு காலமாக கிராமத்தை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர். இந்நிலையில் ஊராட்சித் தலைவர் உள்பட 15 குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் திரு. மதுசூதனன் ரெட்டியை நேரில் சந்தித்து, இச்சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி மனு அளித்தனர். அரசு புறம்போக்‍கு நிலத்தை மீட்ட ஊராட்சி தலைவரையே, ஊரை விட்டு ஒதுக்கிய சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00