+2 துணைத் தேர்விலிருந்து மாற்றுத்திறனாளி மாணவர்களுக்‍கு விலக்‍கு - விரும்பும் மாணவர்கள் தேர்வு எழுதலாம் எனவும் தமிழக அரசு அறிவிப்பு

Jul 31 2021 3:57PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகத்தில் +2 துணைத் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள மாற்றுத்திறனாளி மாணவர்களுக்‍கு விலக்‍கு அளிக்‍கப்படும் என்றும், மாற்றுத்திறனாளி மாணவர்கள் தாங்கள் விரும்பும் பட்சத்தில் தேர்வு எழுதலாம் எனவும், தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறவுள்ள 12-ம் வகுப்பு துணைத் தேர்வுகளை, தனித் தேர்வர்களாக எழுத விண்ணப்பித்துள்ள மாற்றுத்திறனாளி மாணவர்கள் அனைவருக்‍கும், தேர்வு எழுதுவதில் இருந்து விலக்‍கு அளித்து, அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்து அரசு ஆணையிட்டுள்ளது. இவ்வாறு தேர்ச்சி பெற்றதாக அறிவிக்‍கப்படும் மாணவர்கள் அனைவருக்‍கும் மதிப்பெண்கள் வழங்குவது குறித்த நடைமுறையை வடிவமைத்து உரிய ஆணைகள் பள்ளிக்‍கல்வித்துறையால் வெளியிடப்படும் என தெரிவிக்‍கப்பட்டுள்ளது. தேர்வுகளை எழுத விண்ணப்பித்துள்ள மாற்றுத்திறனாளி மாணவர்கள், தாங்கள் விரும்பும் பட்சத்தில் இத்தேர்வினை எழுதலாம் என்றும், தங்களது சுய விருப்பத்தின் அடிப்படையில் தேர்வு எழுதும் மாணவர்கள், பின்னாளில் இந்த ஆணையின் அடிப்படையில் தேர்ச்சி பெற்றதாக, தங்களை அறிவிக்‍குமாறு கோரலாகாது என்றும் தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00